×
التوبةவசனம் 30

அல்-முக்தஸர்

وَقَالَتِ ٱلْيَهُودُ عُزَيْرٌ ٱبْنُ ٱللَّهِ وَقَالَتِ ٱلنَّصَـٰرَى ٱلْمَسِيحُ ٱبْنُ ٱللَّهِ ۖ ذَٰلِكَ قَوْلُهُم بِأَفْوَٰهِهِمْ ۖ يُضَـٰهِـُٔونَ قَوْلَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَبْلُ ۚ قَـٰتَلَهُمُ ٱللَّهُ ۚ أَنَّىٰ يُؤْفَكُونَ ﴿٣٠﴾

அனைத்து யூதர்களும் கிறிஸ்தவர்களும் இணைவைப்பாளர்களே. யூதர்கள் உசைரை அல்லாஹ்வின் மகன் என்று கூறி அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டார்கள். கிருஸ்தவர்கள் மஸீஹ் ஈசாவை அல்லாஹ்வின் மகன் என்றுகூறி அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டார்கள். அவர்களது இந்த அவதூறு எவ்வித ஆதாரமுமின்றி அவர்களின் வாயினால் கூறிய ஒரு கூற்றே. அவர்கள் தமது இந்தக் கூற்றில் “வானவர்கள் அல்லாஹ்வின் மகள்களாவர் என்று” கூறிய அவர்களுக்கு முன்னிருந்த இணைவைப்பாளர்களின் கூற்றுக்கே ஒப்பாகின்றனர். இதனை விட்டும் அல்லாஹ் மிகத் தூய்மையானவன். அல்லாஹ் அவர்களை அழித்து விட்டான். இவ்வளவு தெளிவான சத்தியத்தை விட்டு அசத்தியத்தை நோக்கி எவ்வாறுதான் அவர்கள் திசைதிருப்பப்படுகிறார்களோ?!