அல்-முக்தஸர்
يَوْمَ يُحْمَىٰ عَلَيْهَا فِى نَارِ جَهَنَّمَ فَتُكْوَىٰ بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ ۖ هَـٰذَا مَا كَنَزْتُمْ لِأَنفُسِكُمْ فَذُوقُوا۟ مَا كُنتُمْ تَكْنِزُونَ ﴿٣٥﴾
வழங்க வேண்டிய உரிமையை வழங்காமல் அவர்கள் சேர்த்து வைத்தவை மறுமை நாளில் நரக நெருப்பில் பழுக்க காய்ச்சப்படும். அது நன்கு கொதித்தவுடன் அதைக் கொண்டு அவர்களின் நெற்றிகளிலும் விலாப் புறங்களிலும் முதுகுகளிலும் சூடு இடப்படும். கண்டிக்கும் விதத்தில் அவர்களிடம் “இதுதான் கடமையான உரிமைகளை வழங்காமல் நீங்கள் சேகரித்து வைத்த செல்வங்கள். உரிய கடமைகளைச் செய்யாமல் நீங்கள் சேகரித்து வைத்தவற்றின் விளைவை அனுபவியுங்கள்.” என்று கூறப்படும்.