×
التوبةவசனம் 36

அல்-முக்தஸர்

إِنَّ عِدَّةَ ٱلشُّهُورِ عِندَ ٱللَّهِ ٱثْنَا عَشَرَ شَهْرًا فِى كِتَـٰبِ ٱللَّهِ يَوْمَ خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ مِنْهَآ أَرْبَعَةٌ حُرُمٌ ۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلْقَيِّمُ ۚ فَلَا تَظْلِمُوا۟ فِيهِنَّ أَنفُسَكُمْ ۚ وَقَـٰتِلُوا۟ ٱلْمُشْرِكِينَ كَآفَّةً كَمَا يُقَـٰتِلُونَكُمْ كَآفَّةً ۚ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلْمُتَّقِينَ ﴿٣٦﴾

அல்லாஹ்வின் தீர்ப்பிலும் ஏற்பாட்டிலும் வருடம் பன்னிரண்டு மாதங்களைக் கொண்டதாகும். வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த போதே லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் பதிவேட்டில் அவ்வாறே அல்லாஹ் பதிந்து வைத்துள்ளான். அதில் நான்கு மாதங்களில் போர்புரிவதை அல்லாஹ் தடைசெய்துள்ளான். (அவை, துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய தொடராக வரும் மூன்று மாதங்களும் தனியாக இடம்பெறும் ரஜப் மாதமும் ஆகும்). வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள், அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை என்று மேற்கூறப்பட்ட விடயமே நேரான மார்க்கமாகும். எனவே தடைசெய்யப்பட்ட மாதங்களில் போர் செய்து, அதன் புனிதத்தை சீர்குழைத்து அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதியிழைத்துவிடாதீர்கள். இணைவைப்பாளர்கள் உங்கள் அனைவருடனும் போரிடுவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போரிடுங்கள். தன் கட்டளைகளைச் செயல்படுத்தி, தான் தடுத்தவற்றிலிருந்து விலகி தன்னை அஞ்சுவோருக்கு உதவிசெய்தல், அவர்களை உறுதிப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் அல்லாஹ் அவர்களுடன் இருக்கின்றான். யாருடன் அல்லாஹ் இருக்கின்றானோ அவரை யாராலும் வெல்ல முடியாது.