×
التوبةவசனம் 37

அல்-முக்தஸர்

إِنَّمَا ٱلنَّسِىٓءُ زِيَادَةٌ فِى ٱلْكُفْرِ ۖ يُضَلُّ بِهِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُحِلُّونَهُۥ عَامًا وَيُحَرِّمُونَهُۥ عَامًا لِّيُوَاطِـُٔوا۟ عِدَّةَ مَا حَرَّمَ ٱللَّهُ فَيُحِلُّوا۟ مَا حَرَّمَ ٱللَّهُ ۚ زُيِّنَ لَهُمْ سُوٓءُ أَعْمَـٰلِهِمْ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَـٰفِرِينَ ﴿٣٧﴾

அரபிகள் அறியாமைக் காலத்தில் செய்துகொண்டிருந்தது போன்று புனிதப்படுத்தப்பட்ட மாதத்தின் புனிதத்தை, புனிதப்படுத்தப்படாத ஒரு மாதத்திற்கு மாற்றி, அதனைப் புனித மாதத்தின் இடத்தில் வைத்து அதன் புனிதத்தைப் பிற்படுத்துவது இறைநிராகரிப்பை விட மேலதிகமான நிராகரிப்பாகும். புனித மாதங்களின் விடயத்தில் அவனது சட்டத்தை அவர்கள் நிராகரித்துள்ளனர். ஷைத்தான் தவறான இந்த வழிகாட்டலை அறிமுகப்படுத்தி அல்லாஹ்வை நிராகரித்தவர்களை வழிகெடுக்கிறான். ஒரு வருடம் அதன் புனிதத்தை மீறுகின்றனர். மற்றொரு வருடம் அதன் புனிதத்தைப் பேணுகின்றனர். உரிய மாதத்துக்கு முரண்பட்டாலும் அல்லாஹ் புனிதப்படுத்திய மாதங்களின் எண்ணிக்கையுடன் உடன்படுவதற்காகவே இவ்வாறு செய்கின்றனர். எனவேதான் ஒரு மாதத்தின் புனிதத்தை மீறினால் அதற்குப் பகரமாக இன்னுமொரு மாதத்தைப் புனிதப்படுத்துகின்றனர். அதன் மூலம் அல்லாஹ் புனிதப்படுத்திய மாதங்களின் புனிதத்தை அவர்கள் மீறுகின்றனர். அதற்குரிய சட்டங்களுக்கு மாறுசெய்கின்றனர். அவர்களின் இந்த தீய செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகுபடுத்திக் காட்டியுள்ளான். எனவே அதன்படி செயல்படுகிறார்கள். அவற்றில் ஒன்றே புனித மாதத்தைப் பிற்போடுவதாகும். நிராகரிப்பில் நிலைத்திருக்கும் நிராகரிப்பாளர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட மாட்டான்.