×
التوبةவசனம் 38

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ مَا لَكُمْ إِذَا قِيلَ لَكُمُ ٱنفِرُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ ٱثَّاقَلْتُمْ إِلَى ٱلْأَرْضِ ۚ أَرَضِيتُم بِٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا مِنَ ٱلْـَٔاخِرَةِ ۚ فَمَا مَتَـٰعُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا فِى ٱلْـَٔاخِرَةِ إِلَّا قَلِيلٌ ﴿٣٨﴾

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உண்மைப்படுத்தி, அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களுக்கு என்னவாயிற்று? நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் எதிரிகளுடன் போரிடுவதற்காக அழைக்கப்பட்டால் சோம்பலுற்று, உங்களின் வீடுகளில் தங்கி விடுகிறீர்களே? அல்லாஹ் தன் பாதையில் போரிடுபவர்களுக்காக தயார்படுத்திவைத்துள்ள நிலையான மறுமை இன்பங்களுக்குப் பகரமாக அழியக்கூடிய, நிரந்தரமற்ற இவ்வுலக இன்பங்களை விரும்புகிறீர்களா? மறுமையோடு ஒப்பிடும் போது இவ்வுலக இன்பங்கள் அற்ப இன்பங்களேயாகும். நிரந்தரமானதை விட்டு விட்டு அழியக்கூடியதையும் மகத்தானதை விட்டுவிட்டு அற்பமானதையும் ஓர் அறிவாளி எவ்வாறு தேர்ந்தெடுப்பான்?