×
التوبةவசனம் 42

அல்-முக்தஸர்

لَوْ كَانَ عَرَضًا قَرِيبًا وَسَفَرًا قَاصِدًا لَّٱتَّبَعُوكَ وَلَـٰكِنۢ بَعُدَتْ عَلَيْهِمُ ٱلشُّقَّةُ ۚ وَسَيَحْلِفُونَ بِٱللَّهِ لَوِ ٱسْتَطَعْنَا لَخَرَجْنَا مَعَكُمْ يُهْلِكُونَ أَنفُسَهُمْ وَٱللَّهُ يَعْلَمُ إِنَّهُمْ لَكَـٰذِبُونَ ﴿٤٢﴾

தூதரே!- போருக்குப் புறப்படாமல் இருக்க உம்மிடம் அனுமதி கோரிய நயவஞ்சகர்களை, எளிதாக அடைந்துகொள்ளும் போர்ச் செல்வத்துக்கும் சிரமமற்ற பயணத்துக்கும் நீர் அழைத்திருந்தால் அவர்கள் உம்முடன் வந்திருப்பார்கள். ஆயினும் எதிரியை நோக்கிய பயணத் தூரம் நீண்டதாக அவர்களுக்குத் தென்பட்டதால் அவர்கள் பின்தங்கிவிட்டார்கள். போருக்குப் புறப்படாமல் இருக்க உம்மிடம் அனுமதிகோரும் இந்த நயவஞ்சகர்கள் நீர் திரும்பிவரும் போது அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுவார்கள்: “உங்களுடன் ஜிஹாதிற்காக புறப்பட முடிந்திருந்தால் நாங்களும் உங்களுடன் புறப்பட்டிருப்போம்.” போரை விட்டு பின்தங்கியதனாலும் பொய்ச் சத்தியங்களினாலும் தம்மை அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாக்கி தமக்குத் தாமே அழித்துக் கொண்டார்கள். அவர்கள் தமது கூற்றிலும் சத்தியங்களிலும் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்.