அல்-முக்தஸர்
عَفَا ٱللَّهُ عَنكَ لِمَ أَذِنتَ لَهُمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَكَ ٱلَّذِينَ صَدَقُوا۟ وَتَعْلَمَ ٱلْكَـٰذِبِينَ ﴿٤٣﴾
தூதரே!- போருக்குப் புறப்படாமல் இருக்க அவர்களுக்கு அனுமதியளிப்பதற்கு நீர் எடுத்த முடிவுக்காக அல்லாஹ் உம்மை மன்னித்துவிட்டான். உண்மையாகவே காரணம் உடையவர்கள் யார், பொய்யர்கள் யார் என்பது தெளிவாகும் முன்னரே அவர்களுக்கு நீர் ஏன் அனுமதியளித்தீர்? அவ்வாறு தெளிவாகும் வரை காத்திருந்திருந்தால் பொய்யர்களின்றி உண்மையாளர்களுக்கு மாத்திரம் நீர் அனுமதி வழங்கியிருக்கலாம்.