×
التوبةவசனம் 59

அல்-முக்தஸர்

وَلَوْ أَنَّهُمْ رَضُوا۟ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَقَالُوا۟ حَسْبُنَا ٱللَّهُ سَيُؤْتِينَا ٱللَّهُ مِن فَضْلِهِۦ وَرَسُولُهُۥٓ إِنَّآ إِلَى ٱللَّهِ رَٰغِبُونَ ﴿٥٩﴾

தூதரே! தர்மப் பொருள்களைப் பங்கிடும் விஷயத்தில் உம்மைக் குறைகூறும் இந்த நயவஞ்சகர்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு விதித்ததை ஏற்றுக் கொண்டு, “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அல்லாஹ் தன் அருளிலிருந்து எங்களுக்கு வழங்குவான். அல்லாஹ் வழங்கியதிலிருந்து தூதரும் எங்களுக்கு வழங்குவார். நாங்கள் அல்லாஹ்விடமே - அவன் எங்களுக்கு வழங்குவான் என்று - ஆர்வம் கொண்டுள்ளோம்” என்று கூறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அவர்கள் இவ்வாறு கூறியிருந்தால் அது அவர்கள் குறைகூறுவதைவிடச் சிறந்ததாக அமைந்திருக்கும்.