அல்-முக்தஸர்
إِنَّمَا ٱلصَّدَقَـٰتُ لِلْفُقَرَآءِ وَٱلْمَسَـٰكِينِ وَٱلْعَـٰمِلِينَ عَلَيْهَا وَٱلْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِى ٱلرِّقَابِ وَٱلْغَـٰرِمِينَ وَفِى سَبِيلِ ٱللَّهِ وَٱبْنِ ٱلسَّبِيلِ ۖ فَرِيضَةً مِّنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ﴿٦٠﴾
நிச்சயமாக கடமையான தர்மங்கள், தொழில் அல்லது உத்தியோகம் இருந்தும் போதுமான வருமானமின்றி கவனிப்பாரற்றுள்ள ஏழைகளுக்கும், எதையுமே சொந்தமாக்கிக் கொள்ளாத அவர்களது நிலமை அல்லது பேச்சின் மூலம் தெளிவாக வசதியற்றவர்கள் என மக்களால் அறியப்பட்ட வறியவர்களுக்கும், ஆட்சியாளர் ஸகாத்தை சேகரிப்பதற்காக நியமித்தவர்களுக்கும், ஸகாத்தை வழங்குவதால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படும் நிராகரிப்பாளர்களுக்கும் அல்லது ஈமான் உறுதியாவதற்காக பலவீனமான நம்பிக்கையாளர்களுக்கும் அல்லது ஸகாத்தை பெறுவதன் மூலம் முஸ்லிம்களுக்கு தீங்கிழைப்பதை தவிர்ந்து கொள்வோருக்கும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் வீண்விரயத்திற்காகவோ பாவம் செய்வதற்கோ அல்லாமல் கடன் பெற்ற ஆனால் கடனை அடைக்க முடியாத கடனாளிக்கும் அல்லாஹ்வின் பாதையில் போராடுவோரை தயார்படுத்துவதற்காகவும் பிரயாணச் செலவின்றி தவிக்கும் பிரயாணிக்கும் உரியனவாகும். ஸகாத்தை இவர்களுக்கு மாத்திரம் செலவிடுவதே இறைகட்டளையாகும். அல்லாஹ் தனது அடியார்களின் நலன்களை நன்கறிந்தவனும் அவனது திட்டமிடலிலும் சட்டதிட்டங்களிலும் ஞானமுடையவனுமாவான்.