அல்-முக்தஸர்
وَمِنْهُمُ ٱلَّذِينَ يُؤْذُونَ ٱلنَّبِىَّ وَيَقُولُونَ هُوَ أُذُنٌ ۚ قُلْ أُذُنُ خَيْرٍ لَّكُمْ يُؤْمِنُ بِٱللَّهِ وَيُؤْمِنُ لِلْمُؤْمِنِينَ وَرَحْمَةٌ لِّلَّذِينَ ءَامَنُوا۟ مِنكُمْ ۚ وَٱلَّذِينَ يُؤْذُونَ رَسُولَ ٱللَّهِ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴿٦١﴾
நயவஞ்சகர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதருக்கு வார்த்தைகளினால் தொல்லை கொடுக்கிறார்கள். அவரது சகிப்புத் தன்மையை காணும் போது, “இவர் யார் என்ன கூறினாலும் அதனை நம்பிவிடுகிறார். உண்மை எது பொய் எது எனப் பிரித்தறிய முடியாதவர்” என்று கூறுகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “தூதர் நன்மையான விஷயங்களைத்தான் கேட்கிறார். அல்லாஹ்வையும் உண்மையாளர்களான நம்பிக்கையாளர்கள் கூறுவதையும் உண்மைப்படுத்துகிறார். அவர்களுடன் கருணையுடன் நடந்துகொள்கிறார். அல்லாஹ்வின் தூதருக்குத் ஏதேனும் ஒரு வகையில் தொல்லை கொடுப்பவருக்கும் வேதனைமிக்க கடும் தண்டனை உண்டு.