×
التوبةவசனம் 90

அல்-முக்தஸர்

وَجَآءَ ٱلْمُعَذِّرُونَ مِنَ ٱلْأَعْرَابِ لِيُؤْذَنَ لَهُمْ وَقَعَدَ ٱلَّذِينَ كَذَبُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ ۚ سَيُصِيبُ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴿٩٠﴾

மதீனாவிலும் அதைச் சுற்றிலும் இருக்கின்ற நாட்டுப்புற அரபிகள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியாமல் பின்தங்குவதற்காக சாக்குப்போக்குகள் கூறி அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதிகோர வந்தார்கள். மற்றொரு கூட்டத்தினரோ அல்லாஹ் அளித்த வாக்குறுதியின் மீது நம்பிக்கையின்மையினாலும் தூதரை உண்மைப்படுத்தாததனாலும் சாக்குப்போக்குகள்கூட கூறாமல் பின்தங்கிவிட்டார்கள். இவர்களின் இந்த நிராகரிப்பினால் வேதனைமிக்க தண்டனை இவர்களை அடையும்.