அல்-முக்தஸர்
لَّيْسَ عَلَى ٱلضُّعَفَآءِ وَلَا عَلَى ٱلْمَرْضَىٰ وَلَا عَلَى ٱلَّذِينَ لَا يَجِدُونَ مَا يُنفِقُونَ حَرَجٌ إِذَا نَصَحُوا۟ لِلَّهِ وَرَسُولِهِۦ ۚ مَا عَلَى ٱلْمُحْسِنِينَ مِن سَبِيلٍ ۚ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ ﴿٩١﴾
பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், முதியோர், குருடர்கள், செலவழிப்பதற்கு எதையும் பெறாத ஏழைகள் ஆகியோர் போரை விட்டுப் பின்தங்கியதனால் அவர்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. ஏனெனில் அவர்கள் தக்க காரணங்களைப் பெற்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமிக்கவர்களாகவும், அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். நல்லமுறையில் செயல்படும் உரிய காரணமுடையவர்களான நல்லோர்கள் தண்டனைக்கு உரியோர்களல்ல. நன்மை செய்வோரின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.