×
التوبةவசனம் 97

அல்-முக்தஸர்

ٱلْأَعْرَابُ أَشَدُّ كُفْرًا وَنِفَاقًا وَأَجْدَرُ أَلَّا يَعْلَمُوا۟ حُدُودَ مَآ أَنزَلَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ﴿٩٧﴾

நாட்டுப்புற அரபிகள் நிராகரித்தால், நயவஞ்சகத்தனம் செய்தால் அவர்களது நிராகரிப்பும் நயவஞ்சகமும் நகரவாசிகளை விட கடுமையாக இருக்கும். வெறுப்பு, கடின மனம் மற்றும் குறைவான தொடர்பு, ஆகிய பண்புகள் அவர்களிடம் உள்ளதால் மார்க்கத்தையும் அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கிய சட்டங்களையும் கடமைகளையும் உபரியானவற்றையும் அவர்கள் அறியாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அவர்களின் நிலைமைகளை அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. தன் நிர்வாகத்தில், தான் வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம் மிக்கவன்.