×
التوبةவசனம் 98

அல்-முக்தஸர்

وَمِنَ ٱلْأَعْرَابِ مَن يَتَّخِذُ مَا يُنفِقُ مَغْرَمًا وَيَتَرَبَّصُ بِكُمُ ٱلدَّوَآئِرَ ۚ عَلَيْهِمْ دَآئِرَةُ ٱلسَّوْءِ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ﴿٩٨﴾

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்த செல்வம் நஷ்டமும் அபராதமுமாகும் எனக் கருதுவோரும் நாட்டுப் புறத்தைச் சேர்ந்த நயவஞ்சகர்களில் உள்ளனர். ஏனெனில் செலவளித்தால் கூலி வழங்கப்படாது தடுத்துக் கொண்டால் அல்லாஹ் தண்டிக்கமாட்டான் என அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனாலும் சில சமயங்களில் முகஸ்துதிக்காகவும் தப்பிப்பதற்காகவும் செலவு செய்கிறார்கள். -நம்பிக்கையாளர்களே!- உங்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு அதன் மூலம் உங்களிடமிருந்து விடுபட்டு விட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு நிகழ வேண்டும் என விரும்பும் தீங்கு, மோசமான விளைவுகள் ஆகியவற்றை நம்பிக்கையாளர்களுக்கு நிகழாமல் அல்லாஹ் அவர்களுக்கு ஏற்படுத்திவிட்டான். அவர்கள் கூறுவதை அல்லாஹ் செவியேற்கக் கூடியவன்; மறைத்து வைத்திருப்பதை அவன் நன்கறிந்தவன்.